Sunday, October 18, 2015

ஜேக்டோவின் கோரிக்கையை நெருங்கும் அரசாங்கம்.

அவசர தகவல் கேட்கும் கல்வித்துறை

இனிய தோழமையே.

அக்டோபர் 8 அடையாள வேலை நிறுத்தத்தை நோக்கி உன் பயணத்தை நகர்த்திக்கொண்டிருக்கும் வேலையில்,
நம் கோரிக்கைகள் குறித்து சற்று மௌனம் கலைக்க துவங்கியிருக்கிறது அரசாங்கம்.

இன்று (5.10.15) மதியம் கல்வித்துறையின் மாவட்ட உயர் அலுவலர்களுக்கு அவசர அவசரமாக மின்னஞ்சல் செய்தியால் மாவட்ட கல்வித்துறை பரபரத்துள்ளது.

1.6.2006ல் பணி வரன்முறைப்படுத்தப்பட்டு கால முறை ஊதியம் பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன நாள் முதல் கால முறை ஊதியம் வழங்கினால் அரசுக்கு எவ்வளவு செலவித் தொகை ஏற்படும் என உத்தேச மதிப்பினை உடனடியாக அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இச்செய்தி மகிழ்ச்சி என்றாலும், இது மட்டுமல்ல நமது கோரிக்கை என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.

அதற்கு பதிலாக இடைநிலை ஆசிரியர்களின் தர ஊதியத்தை மத்தியப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக உயர்த்துவதில் என்ன தயக்கம் என்று நமக்கு புரியவில்லை.

சுமார் 40,000 ஆசிரியர்கள் மட்டுமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கோமா நிலையிலிருக்கும் நோயாளிக்கு சிகிச்சையளிப்பதுதான முக்கியம் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.

அல்லது அக்டோபர் 8 புரியவைக்கும் என்பதை நீ நிருபித்து காட்ட வேண்டும்.

ேக்டோ தலைவர்கள் உனக்கு இட்ட கட்டளைப்படி உன்னோடு பணியாற்றும் சக ஆசிரியத் தோழனையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுத்து.

அக்டோபர் 8 என்பது தமிழக வரலாற்றில் இடம்பெறும் நமக்கான நாள்.

வீட்டில் உள்ளவர்கள் சம்மதம் இல்லை அதனால் வேலைக்கு செல்ல வேண்டும் என கோரிக்கை விடும் உன் சக ஆசிரியரின் குடும்பத்திற்கும் புரிய வை நமது இழப்பை.

இன்று தவற விட்டோமானால் என்றும் பெற முடியாது என்பதை உணர்த்து.

கடந்த கால போராட்டத்தில் கிட்டதட்ட 10,000க்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்கள் ஒரு மாத சிறையில் வாடி பெற்று தந்த உரிமையை இழந்து நிற்கிறோம் என்பதை எடுத்துக்காட்டு

சிறை வளாகத்தில் உயிர் நீத்த தியாகி கருப்பணன் போன்றோர்களின் தியாகத்தால் பெற்ற உரிமை எங்கே? என சிந்திக்க தூண்டு.

இங்கு போராடாமல் எதுவும் கிடைத்ததில்லை என்பதை விளக்கு.

15 அம்ச கோரிக்கைகளில் எதாவது இரண்டு கோரிக்கைகள் நிறைவேற்றினால் வேலை நிறுத்தம் பிசுபிசுக்கும் என தப்பு கணக்கு போடுபவர்களுக்கு நமது ஒற்றுமையை உணர்த்தும் தினமாக அமையட்டும் அக்டோபர் 8.

உரிமை மீட்பு போரில் பின்னடைவு என்பது இல்லை என்பதை மீண்டும் நிருபிப்போம்.

கோரிக்கை வெல்லும் வரை கோடி கைகள் ஒன்றிணையும் என்பதை உணர்த்துவோம்.

இயக்கம் மறந்து சங்கமிப்போம்...
இறுதி வெற்றி நமதென்போம்....

தொடர்ந்து உன்னோடு பயணிப்பேன்...

Whatsappல் அனுப்பியவர் S.R Mohan

No comments:

Post a Comment