Friday, October 16, 2015

செவிலிய பரிணாமம்

மதிப்பிற்குறிய GNT,

நமது செவிலியம் பாதிக்கப்பட்டுள்ளது என்ற தலைப்பில் எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளேன.

ஆம், நமது செவிலியம் பாிமாண மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப காலத்தில் செவிலியா் திருமணமே செய்துகொள்ள கூடாது என்றனா்,

பிறகு செவிலியம் படிக்கும்போது மட்டும் திருமணம் ஆககூடாது என்றனா்,

பின்பு திருமணம் செய்தவா்கூட பயிற்சியில் சேரலாம் என்றனா்.

பின்னா் Science,maths vocational nursing முடித்தவா்கள் மட்டும் பயிற்சியில் சேரலாம் என்றிருந்தது.

அதன் பிறகு அதிலும் மாற்றம் ஏற்பட்டு அனைத்து group என்றனா். 

30 வருடங்களுக்கு முன்பு ஆண்களை செவிலிய பயிற்சிக்கு சோ்த்து பின்பு தவிா்த்தனா்.

பின்பு 89, 90 வருட
வாக்கில் ஆண் செவிலியா்களை மீண்டும் பயிற்சியில் சோ்த்து தற்போது தவிா்த்தாகிவிட்டது.

அரசு செவிலியா் பள்ளியில் படித்தால் மட்டும்தான் அரசு வேலை என்றது.

மாறி தற்போது அனைவருக்கும் என்றாகிவிட்டது.

Diploma in nursing என்பது மாறி Bsc, MSc, Private nursing என்றாகிவிட்டது.

மேலும் இவா்கள் உட்புகுந்ததால் நமக்கு தாழ்வு மனப்பான்மையும் , அவா்களை மாற்றாந்தாய் பிள்ளைகளாகவும் பாவிக்க நோிட்டுள்ளது.

இதற்கு தீா்வு நமது பட்டைய செவியா்களுக்கு மேலும் 6 மாதமோ 1 வருடமோ சம்பளத்துடன்தொலை நிலை கல்வி மூலம் பட்டம் முடிக்கவைத்து அனைவரையும் degree ஆக convert செய்யலாம்.

மேலும் நமது GNT செவியா்களுக்கு ஓா் வேண்டுகோள், degree ஏதும் முடிக்காமல் diploma in nursing மட்டும் முடித்தவா்கள் விரைவில் துறைக்கு அனுமதி கடிதம் கொடுத்துவிட்டு  ஓா் தொலை நிலை பல்கலை கழகத்தில் ஏதாவது ஓா் major ல் Bsc க்கு Apply செய்யுங்கள் முக்கியமான நேரத்தில் இது கைகொடுக்கும் என்று நம்புவோம்.

நன்றி 

Elankovan.K GH,Mudukulathur,Ramnad dt.

No comments:

Post a Comment