Sunday, October 18, 2015

வெங்காயம் விலையேரிய கதை

என் நிலத்துல விளையுற வெங்காயத்தோட விலை விவசாயி என்னைய கேக்காம,விவசாயி எனக்கே தெரியாம எப்படிங்க கூடிச்சு?

ஓ..அதுவா அதுக்கு காரணம் இன்பிலேஷன்...

இன்பிலேஷன்னா?

பணவீக்கம்ங்க...உங்களுக்கு புரியுற மாதிரி சொல்லனும்னா ஒரு மஞ்சப் பை நிறைய பணத்தை எடுத்துட்டுப் போயி ஒரே ஒரு உளுந்தவடை வாங்குறது.

இதுக்கு காரணம் என்னங்க ?

பல காரணங்கள்,முக்கியமா ஷேர் மார்க்கெட் சரிவு முக்கிய காரணம்.இப்ப பாத்தீங்கன்னா சீனால பொருளாதாரம் சரியில்லை,அதனால நம்ம பங்கு சந்தைகள் அடிவாங்குது,இதே மாதிரி 2008 ல அமெரிக்கால வந்தப்பவும்,நம்ம..

நிப்பாட்டுங்க..எங்கயோ இருக்குற சீனா-அமெரிக்கால நடக்குற விசயங்களால இந்திய ஷேர் மார்க்கெட் ஏங்க பாதிக்கனும்?

ஏன்னா,பல நாட்டோட ஷேர் மார்க்கெட்கள்ல முதலீடு செய்வதே,தங்களோட தொழிலாக வச்சுருக்குற பல வெளிநாட்டு கம்பெனிகள் நம்ம நாட்டு ஷேர் மார்க்கெட்லயும் முதலீடுகள் பண்ணிறுக்காங்க.அதனால வெளிநாட்ல எதாச்சும் ஆச்சுன்னா,இவனுங்க இங்க முதலீடுகளை வெளியே எடுத்துருவாங்க.அதான் இப்படி.

இது எப்படிங்க நம்ம ஊர்ல விளையுற,நான் வாங்குற வெங்காயத்தோட விலையை பாதிக்குது?

அதுக்கு கமாடிட்டி மார்க்கெட்,ஆன்லைன் டிரேடிங் ன்னு காரணங்கள்.

அம்பது வருசத்துக்கு முன்னாடி இப்படி இல்லையேங்க?

அம்பது வருசத்துக்கு முன்னாடி ஷேர் மார்க்கெட்ஸ் இல்லையே...

ஆயிரம் வருசமா வெங்காயம் இருக்கு,அதை அம்பது வருசத்துக்கு முன்னாடி வந்த ஷேர் மார்க்கெட் எப்படிங்க கட்டுப்படுத்தலாம்? என்ன காரணம்?

அதுக்கு காரணம் குளோபுலைஷேசன்,பாரீன் டைரக்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ்...

குளோபுலைஷேசன் அப்படின்னா?

அப்படின்னா உலகத்துல இருக்குற எந்த நாடும் எந்த நாட்டோடையும் வியாபாரம் செய்யலாம்,முதலீடு செய்யலாம்.

இதை யாரு கண்டுபிடிச்சான்?

வெள்ளைக்காரன்

ஏன் கண்டுபிடிச்சான்?

ஏன்னா அவன் நாட்டுல அவன் உயிர் வாழத் தேவையான எதுவுமே கிடைக்காது.பெட்ரோல்-டீசல் முதல்கொண்டு...அதனால உலகத்துல எந்த நாடுகள்ல அவனுக்கு தேவையானது கிடைக்குமோ,அந்த நாடுகளை காலனியாதிக்கம் ங்கற பேர்ல அடிமையாக்குனான்,இப்ப அது முடியாது.அதான் வேற மாதிரி இப்ப வர்றான் குளோபுலைஷேசன் ங்கற பேர்ல.

இதால எனக்கு என்ன உபயோகம்?

குளோபுலைஷேசன் வந்ததால தான் உனக்கு ஐபோன் கிடைக்குது.கம்ப்யூட்டர் கிடைக்குது.பல வெளிநாட்டு கம்பனிகள் இங்க வந்தது,ஏகப்பட்ட வேலைவாய்ப்புகள் கிடைச்சது...

வேலைவாய்ப்பு ஒரு பக்கம் இருக்கட்டும்,வெள்ளைக்காரன் எதுக்கு இங்க வந்து கம்பனி ஆரம்பிச்சான்?அவன் பொருளை இங்க தயாரிச்சு,அதை இங்க விற்க தானே?வித்து அந்த காசை அவன் நாட்டுக்கு கொண்டு போகத் தானே?

ஒரு வகைல ஆமா...

அப்ப,அப்ப வெள்ளைக்காரன் இங்க கம்பெனி ஆரம்பிச்சு,அத வச்சு பணம் சம்பாதிச்சதால தான்,அத வச்சு,அவனால வெங்காயம் வாங்க முடியுது?அரிசி கிடைக்குது ன்னும் சொல்லலாம்ல?

ஆமா சொல்லலாம்.

என் ஊருக்கு வந்து,கூல் டிரிங்ஸ் கம்பனியைப் போட்டு,என் நிலத்து தண்ணீரை எடுத்து,அதை எனக்கே வித்து,அந்த காசை வச்சு நான் விளைவிக்குற காய்கறிகளை வெள்ளைக்காரன் வாங்குறது-இதுக்கு பேரு தானே குளோபுலைஷேசன்?

அடடா..ஆமாங்க...

அப்ப எதுக்கு டாலர்-ரூபாய் ன்னு கொழப்பனும்? ஒரு ஐபோனுக்கு ஒன்றரை கிலோ வெங்காயம் ன்னு விற்க வேண்டியது தானே?

அது..அது..வந்து..அப்படி முடியாது...

ஐநூறு வருசத்துக்கு முன்னாடி-உலகத்துல ஒவ்வொரு நாடுகளுக்கு இடையே வியாபாரம் நடக்கலையா?2000 வருசத்துக்கு முன்னாடியே தமிழர்கள்-கிரேக்கர்களான யவணர்களோட வாணிகம் செஞ்சுருக்காங்களே?

நடந்துச்சு...ஆனாலும்...இப்ப இன்பிலேஷன்...எக்கனாமிக் டிப்ரஷன்..

என்னடா ஆனாலும்?அப்பல்லாம் இந்த இன்பிலேஷசன் இருந்ததா?எக்கனாமிக் டிப்ரஷன் இருந்ததா?

இல்லை...ஆனா..இப்ப...அது......முடியாது....

ஏன் முடியாது? அவனுக்கு என்ன தேவையோ அதை,அவன் எனக்கு தேவையானதை தந்து வாங்கிக்கட்டும்.நடுவுல எதுக்கு பணம் ன்னு ஒண்ணு வருது? கரண்சி ன்னு வருது?

யோவ்...நீங்க இப்படில்லாம் புத்திசாலித்தனமா லாஜிக்கா பேசுனா...படிச்சுட்டு டை கட்டிட்டு திரியுற நாங்க என்ன செய்றது?

வந்து என்கூட எருமை மாடு மேய்...பாலை கற...அத தந்து-அதுக்கு பதிலா பிஎம்டபிள்யூ வாங்கு....

நானா? அப்ப என் படிப்பு? என் டை? என் கோட்டு?

சோறு முக்கியமா? டை முக்கியமா? டை கட்டாட்டியும் நீ உயிரோட இருப்ப.ஆனா சோறு இல்லாட்டி?

WhatAppல் அனுப்பியவர் SR Mohan

No comments:

Post a Comment