Sunday, October 18, 2015

ஒரு நாள் பழச்சாறு டயட்!

Sent via WhatsApp by Gopi

நர்ஸ் சம்பளம் ஒரு லட்சம்! சவுதி வேலைக்கு அரசு அழைப்பு


Sent via WhatsApp by Pari

DA increase government order


Sent via WhatsApp Kavitha L

FNA Duties

Mission Indradhanush


Mission Indradhanush was launched by Ministry of Health and Family Welfare (MOHFW) Government of India on 25th December, 2014. The objective of this mission is to ensure that all children under the age of two years as well as pregnant women are fully immunized with seven vaccine preventable diseases.

The Mission Indradhanush, depicting seven colours of the rainbow, targets to immunize all children against seven vaccine preventable diseases, namely:

Diphtheria
Pertussis (Whooping Cough)
Tetanus
Tuberculosis
Polio
Hepatitis B
Measles.
In addition to this, vaccines for Japanese Encephalitis (JE) and Haemophilus influenzae type B (HIB) are also being provided in selected states.

First Phase of Mission Indradhanush:

For the first phase, 201 high focus districts across 28 states in the country that have the peak number of partially immunized and unimmunized children were identified by the Government.

There were total four rounds in the first phase of the mission. The first round of the first phase was started from 7th April, 2015 and continued for more than a week.

Further, second, third and fourth rounds were held for more than a week in the month of May, June and July starting from 7th of each month. The first phase of this mission was very successful.

The main highlights of the first phase of Mission Indradhanush are as given below:

Total 9.4 lakh sessions were organized during these four rounds of Mission Indradhanush
About 2 crore vaccines were given to the children as well as pregnant women.
Tetanus Toxoid vaccine was given to more than 20 lakh pregnant women
75.5 lakh children were vaccinated and about 20 lakh children were fully vaccinated.  
More than 57 lakh zinc tablets and 16 lakh ORS packets were freely distributed to all the children to protect them against diarrhoea.
Second Phase of Mission Indradhanush

The second Phase of Mission Indradhanush has been started from 7th October, 2015. The second, third and fourth rounds of this phase will start from 7th November, 7th December 2015 and 7th January 2016. 

The aim is to achieve full immunization in 352 districts which includes 279 mid priority districts, 33 districts from the North East states and 40 districts from phase one where huge number of missed out children were detected.

Sent via WhatsApp by Kalaiselvi

மீசுரக் கண்டக் கொத்தளம்.

தென்னிந்தியாவின் மிக வெப்பமான நகரம்.

சுற்றிலும் கிழக்கு மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ள நகரம்.

தமிழகத்தின் ஏழாவது பெரிய மாநகரம்.

மிகப் பெரும் சிறைச்சாலைகளைக் கொண்ட நகரம்.

தெற்காசியாவின் மிகப்பெரும் மருத்துவமனை உடைய நகரம்.

ஒரு மாநகராட்சியையும், ஆறு நகராட்சிகளையும் சுமார் 1 இலட்சம் மக்கள் தொகையையும் கொண்ட நகரம்.

தோல் பொருட்கள் உற்பத்தியில் இந்திய அளவில் முதலிடத்தையும், உலக அளவில் இரண்டாமிடத்தையும் பெற்ற நகரம்.

ஒரே ஊரில் மூன்று மலைக் கோட்டைகளையும் ஒரு தரைக் கோட்டையையும் உடைய நகரம்.

இது மட்டும்தானா?

வானளாவிய கற்களாலான மதிற்சுவர்கள்.

கண்களை மலைக்க வைக்கும் சுற்றளவு.

ஒரு கோட்டைக்குள் மற்றொரு கோட்டை போல் மூன்று கொத்தளங்கள்.

பல நூற்றாண்டு காலமாக அசையாமல் நிற்கும் உறுதி.

பல போர்களைக் கண்டு சளைத்து போன மனம்.

இப்படியெல்லாம் இருப்பது வேலூர் மாநகரம் ஒன்றுதான்.

வேலூர்க் கோட்டை :
திம்மி ரெட்டி, பொம்மி ரெட்டி சகோதரர்களால் பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்ட வேலூர் கோட்டைதான் அது.

தென்னிந்தியாவிலேயே மிகச் சிறந்த போர் அரண்களுடன் கட்டப்பட்ட கோட்டை இது.

விஜயநகரப் பேரரசின் வேலூர் மண்டலப் பகுதிகளுக்கான பாதுகாப்பு அரணாக இது வேலூரில் கட்டப்பட்டது.

அது மட்டுமல்ல. ராட்சசி - தங்கடிப் போரில் அதாவது தலைக்கோட்டைப் போரில் விஜயநகரம் வீழ்ந்த பின் அப்பேரரசின் அரசர்கள் முறையே தங்கள் தலைநகர்களை பெனுகொண்டா, சந்திரகிரி மற்றும் வேலூரில் அமைத்துக் கொண்டனர்.

இக்கோட்டை சுமார் நூறாண்டு காலம், பேரரசின் இறுதி அரசரான மூன்றாம் அரங்கனின் காலம் வரை தலைநகரக் கோட்டையாக இருந்தது.

சுற்றிலும் பாதுகாப்பு அரணாக சுமார் 64 அடி ஆழம் கொண்ட அகழியும், மரப்பாலமும் உயிரைக் கொல்லும் முதலைகளும் கொண்டு விளங்கியதாம் இக்கோட்டை.

ஆனால் பற்பல போர்களைக் கண்ட கோட்டையின் அகழி தற்போது ஒரு புறத்தில் தூர்ந்து விட்டது.

ஒரு பகுதியில் மட்டும் தண்ணீர் நிரம்பி உள்ளது.

பொதுவாகவே கோட்டைகளுக்குப் பெயர் வைப்பது தமிழகத்தில் வழக்கமில்லை.

கோட்டைகள் இருக்கும் ஊரின் பெயரோ பகுதியின் பெயரோ வழக்கில் இருப்பது கண்கூடு.

எடுத்துக் காட்டாக மலையில் இருப்பது மலைக்கோட்டை.

புதிதாகக் கட்டப்படுவது புதுக்கோட்டை என்றெல்லாம் கூறலாம்.

ஆனால் இக்கோட்டைக்கு ஒரு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அது வெயிலுக்குப் பேர் போன வேலூரில் வெயிற்காலத்தில் மட்டுமே தெரியும் வண்ணம் கோட்டை மதிலில் பொறிக்கப்பட்டுள்ளது.

கோட்டையின் மேற்குப் பகுதியில் நீருக்கடியில் தமிழிலும், கன்னடத்திலும் மீசுரகண்டக் கொத்தளம் என்ற பெயர் பொறிக்கப்பட்டிருப்பதை வேனிற்காலத்தில் காண முடியும்.

இக்கோட்டைக்குள் சுமார் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேசுவரர் அல்லது ஜக்ஷரகரேசுவரர் கோவில் உள்ளது.

இந்து அரசர்களின் ஆட்சி முடிந்து இசுலாமிய நவாபுகளின் ஆட்சி தொடங்கிய பின்பு 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மசூதியும் உள்ளது.

பின் வெள்ளையர்களின் ஆட்சியில் 1806-ல் கட்டப்பட்ட கிறித்தவ தேவாலயமும் உள்ளது.

இக்கோட்டையை மும்மதச் சந்திப்பு என்றே கூறலாம்.

மேலும் திப்பு மகால், ஐதர் மகால் என்றழைக்கப்படும் அரண்மனைகளும், பாத்தி மகால், பேகம் மகால் என்று கூறப்படும் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையைப் போன்ற தூண்களைக் கொண்ட இரு அரசவை மண்டபங்களும் உளளன.

ஆனால் பண்டைய மன்னர் ஆட்சியின் சுவடுகள் ஏதும் தெரியா வண்ணம் உள்ளிருந்த அனைத்துப் பகுதிகளும் அரசு அலுவலகங்களாக மாற்றப்பட்டிருந்தன.

கோவிலுக்குரிய தெப்பக்குளம் காவலர் பயிற்சிப் பள்ளியின் மைதானமாக மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் இங்கு பல்துறை அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

தற்போது மாநில அரசின் தொல்பொருள் அருங்காட்சியகம், மத்தியத் தொல்பொருள் துறையின் அருங்காட்சியகம், திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் ஒருபிரிவு ஆகியன நடைபெற்று வருகின்றன.

அகழியில் சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ள படகு சவாரி நடக்கின்றது.

மாலை நேரத்தில் அலங்கார ஒளிவிளக்குகள் வீச கோட்டை காட்சி தருகின்றது.

ஜலகண்டேசுவரர் கோவில் திருவிழாக்கள், சித்திரை மாத புஷ்பப் பல்லக்கு, சுற்றிப் பார்ப்பதற்கு வரும் மக்கள் கூட்டம் எப்போதும் கோட்டையைக் கலகலப்பாக்குகின்றது.

நகரைச் சுற்றியுள்ள மலைச்சிகரங்களில் கட்டப்பட்டுள்ள சுக்ரோவ், சஜரோவ் முதலான மூன்று கோட்டைகளைப் பார்த்தபடி தன் பழம் பெருமைகளை நினைத்தபடி அண்ணாந்து நிற்கின்றது இந்த மீசுரக் கண்டக் கொத்தளம்.

முதல் அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் " ஒரு கோடி கர்ப்பிணி பரிசோதனை " மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் தகவல்

அரசு ஊழியர்களின் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் - ஊதியகுழுவிற்கு முன்னர் மற்றும் பின்னர் ஊழியர்கள் உள்ள ஊதிய கட்டு (PAY BAND)விவரங்கள் கோரி நிதித்துறை செயலர் அனைத்து அரசு முதன்மை செயலர்களுக்கும் கடிதம்.


நிதித்துறை - ஊதியகுழு - அரசு ஊழியர்களின் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் - ஊதியகுழுவிற்கு முன்னர் மற்றும் பின்னர் ஊழியர்கள் உள்ள ஊதிய கட்டு (PAY BAND)விவரங்கள் கோரி நிதித்துறை செயலர் அனைத்து அரசு முதன்மை செயலர்களுக்கும் கடிதம்.

தமிழக நிதித்துறை செயலரது
கடித விபரம்:கடித எண்;55891/நிதித்துறை/நாள்;08/10/2015

அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு ஊதியக்குழு வழங்கிய ஊதிய விகிதத்தை மீண்டும் திருத்தியமைக்க தனிநபராகவும், சங்கங்கள் மூலமாகவும் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதால்

'ஊதிய முரண்பாடுகள் ஆராய(Examining the Pay anamolies)- ஊதியக்குழுவிற்கு முன்னர் மற்றும் பின்னர் ஊழியர்கள் உள்ள ஊதியக்கட்டு விவரங்கள், குறிப்பிட்ட ஊதியக்கட்டில் துறை வாரியாக உள்ள ஊழியர்களது மொத்த எண்ணிக்கை, நிரப்பப்பட்ட இடங்கள், காலியிடங்கள், யார் அதிகார வரம்பிற்குட்பட்ட பதவி, கல்வித்தகுதி, பணி விபரங்கள் & பொறுப்புகள்' கோரி தமிழக நிதித்துறை செயலர் அனைத்து துறை அரசு செயலர்களுக்கும் - கடிதம்(08.10.2015)எழுதியுள்ளார்.

விரிவான துறை சார்ந்த ஊதியக்கட்டு (PAY BAND) தகவல்கள் - '30.11.2015அல்லது அதற்கு முன்பாகவே(on or before 30.11.2015)' துறை சார்ந்த செயலர்கள் தவறாது தொகுத்து அனுப்பி வைக்க கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

DA Increase

மத்திய அரசு ஊழியர்களைப் போன்றே, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு, கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 113 சதவீதத்தில் இருந்து
119 சதவீதமாக அகவிலைப்படி உயர்ந்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறதோ, அப்போதெல்லாம் தமிழக அரசு ஊழியர்களுக்கும் உயர்வு அளிக்கப்படும்.அதன்படி, மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளது. இதற்கான கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன

தற்செயல் விடுப்பு.


1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல்லது ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக்கலாம்.

2. அவ்வாறு நாட்கள் தொடர்ந்து அனுபவிக்கும் போது , இயற்கை சீற்றம், தேசிய  தலைவர் மரணம் , பந்த், பண்டிகை, திடீர் விடுமுறை காரணமாக 11 வது நாள் அரசு விமுறை என அறிவிக்கப்பட்டால் ஊழியர்  10 க்கு மேற்பட்ட அந்த நாளையும் விடுப்பாக அனுபவிக்கலாம். (அ.நி.எண். 309 ப.ம.நி.சி.(அவி.11)நாள் 16.08.93)

3. தற்செயல் விடுப்பை ஈட்டிய விடுப்பு மற்றும் பிற முறையான விடுப்புடன் இணைத்து அனுபவிக்க இயலாது.

4. தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தில் அதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டியதில்லை. (அ.க.எண். 1410 ப.ம.நி.சீ துறை2.12.77 ).

5. தற்காலிக பணியாளர் மற்றும் தகுதிகாண்பருவத்தினருக்கு 3மாதங்களுக்கு 2  நாட்கள் என்ற அளவில் இவ்வுடுப்பு வழங்கப்படும். (அவி. இணைப்பு VI )

6. தகுதிகாண்பருவம் முடித்தவர் / நிரந்தர பணியாளர் ஆண்டு துவக்கத்திலேயே பணிநிறைவு பெரும் பணியாளருக்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பை ஆண்டு துவக்கத்திலேயே வழங்கலாம். (அரசு கடித எண். 61559 /82 -4  ப.ம.சீ துறை நாள்.17.1.83)

7.  குறைந்தபட்சம் அரைநாள் சிறுவிடுப்பு அனுமதிக்கப்படும்.

8. அவசர காரணங்களுகளுக்காக முதலில் விடுப்பு எடுத்து விட்டு பின்னர் இதற்கான விண்ணப்பத்தினை அளிக்கலாம். ( அரசுக் கடிதம் 61559 /82 -4  ப.ம.சீ துறை நாள். 17.1.83) 

Sent via WhatsApp by U kannan

Tablet Giving Issue Discussion


[Ukannan]
DMS SIDE உள்ள தாலுகா மருத்துவமனைகளில் மதிய மற்றும் இரவு பணிகளில் வரும் அவசர சிகிச்சை பிரிவு நோயாளிகளிக்கு மாத்திரைகள் வழங்க வேண்டியது யாருடைய கடமை?

[Ukannan]
செவிலியர்கள்தான் வழங்க வேண்டும் என ஏதேனும் ஆணை உள்ளதா?

[Umapathy]
அரசு மருத்துவமனை திண்டிவனத்தில் OP சீட்டு கூட செவிலியர் போட வேண்டும்.

இதனை மூத்த செவிலியர்கள் எதிர்க்கவில்லை.

JD வரை கொண்டு சென்றபோது "பிரச்சனை பன்றவங்கள ward போடாதீங்க" என  JD கூறினர்.

.
[Chandru]
Medical college hospital mundi villuppuram jannal thoranga room thoranga andha stool eduthu podunga solldranga appo INI varum kalangalil sindhippom seyal paduvom.

[Ukannan]
மூத்த செவிலியர்கள் பெரும்பாலான தாலுகா மருத்துவமனைகளில் எதையும் கண்டுகொள்வதில்லை. அதுவே நாம் அங்கு சிரமப்பட காரணம்.

[Chandru]
Thani manidanai edirthu kettal pointed seiya paduvom adanal Dan kandu kolvathillai

Otrumaikkana vaziyai thedungal

Alladu kodungal

[Umapathy]
டாக்டருங்க ஊசி போட மாட்டேன்னு சண்ட போடுராங்க.

ஆனா நம்மளால அடுத்தவர் வேலையை செய்ய மாட்டேன்னு சொல்லக்கூட முடியல.

[Chandru]
Manila seyar kuzu meeting arrange panni anga edukkura theermanatha all dean jd dd BMO Ns circular forward pannunga

Adha meerinakka nadavadikkaila iranguvom sollunga appa Evan vela vanguvan

Adhigara thushprayogam

Sangam vendum

[Geetha Krishnan]
5   + 1 chief pharmacist இருந்தால் கண்டிப்பாக இரவு பணி பார்க்க வேண்டும் அவர்கள் . 

5 மற்றும் அதற்கு குறைந்த எண்ணிக்யில் இருந்தால் சுழற்சி முறையில் இரவு 7 மணி வரை மாத்திரை குடுக்க வேண்டும் பார்மசிஸ்ட் .

[ Ukannan ]
நன்றி

[ Ukannan ]
அதை இங்கு பதிவேற்றம் செய்யமுடியுமா?

[Geetha Krishnan] கண்டிப்பாக

[Umapathy]
நன்றி.

யார் தான் இரவு மாத்திரை வழங்க வேண்டும்.

ஒரு வார்டில் 8 நோயாளிக்கு ஒரு செவிலியர் பணியில் இருக்க வேண்டும்.

அவ்வாறு இல்லையெனில் செவிலியர் இரவு பணி பார்க்க வேண்டாமா.

[Ukannan]
நன்றி பாரி

[Ukannan]
மிக்க நன்றி கீதா கிருஷ்ணா

[Geetha Krishnan,]

Ok brother ...அரக்கோணம் மருத்துவ மனையில் பிரச்சனை வந்த போது பாரிவள்ளல் அவர்கள் இந்த தகவலை பெற்று இப்போது பார்மசிஸ்ட்டை மாத்திரை குடுக்க செய்து நமது செவிலியர்களின் ஒற்றுமையை நிலை நிறுத்தியள்ளனர்.

[Gopi] இங்கு  குறிப்பிடுகின்ற. விவாதத்தில்,  மாத்திரைகொடுப்பது யார்?  

வார்டில் நாம்தான் கொடுக்கவேண்டும் ஆனால் புறநோயாளிகளுக்கு மருந்தாளுநர்  தான் கொடுக்க வேண்டும்.

நிறைய PHC யில் மற்றும்   ஒன்றோ அல்லது இரண்டுபேர் இருக்கும் இடத்தில் சிகிச்சையின் நிலை கருதி அவசரசிகிச்சைப் பிரிவு என்ற பேரில் நாம்தான் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக் கைதியாக இருக்கிறோம்.  கோபி.

[Manikandan]
மருந்தாளுனர் -செவிலியர் புரிந்தணர்வு ஒப்பந்தம் (status-quo) 1980க்கு முன்னால் போடபட்டது. அதன்படி தான் நாம் மருந்து கொடுத்து கொண்டு இருக்கிறோம்.
அது மாற்றபடவேண்டும்.
இது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.

[Ukannan]
அதற்கு முன்னர் வார்டுகளில் கூட மருந்தாளுநர்கள் தான் மருந்து மாத்திரைகள் கொடுத்ததாக செய்தி.

[Manikandan]
அதுதான் உண்மை. ஒரு பெட்டி வைத்து சாவி 2உண்டு.
1 நம்மிடமும்
2வது மருந்தாளுனர் இடம் இருக்கும்

[Deepa Srinivasan]
இரண்டு மருந்தாளுநர் இருக்கும் பட்சத்தில் அவர்கள் பணி பற்றி விளக்கவும்.

Tablet Giving Issue RTI Documents

Admin you could Land in trouble , Group content is your Headache, Says Law

Nursing Superintendent Grade 1 counseling.

[Anushya]
G1 covuncilling 14-10-2015

[SR Mohan]
Gr l conselling held on 14.10.2015 at dms upto panal list sl.no.68.pls convey this msg to all district

[Gopi]
14.10.2015. ல் நடைப்பெறுகி G l ல் 58 பேர் மட்டுமே நடைப்பெறுகிறது. 68. அல்ல.  68 என்பது  வரிசை எண்.  இதுதான் உறுதி  இறுதி தகவல். மா.கோபி.

இன்னும் சற்று நேரத்தில் G l கலந்தாழ்வு கூட்டம் நடைப்பெறவுள்ளது. மா.கோபி.

மருத்துவமனை

இந்த லோகத்தில் பெரிய ஆராதனை ஆலயம் மருத்துவ மனைகள் தான்.

இங்கு
இந்து,
கிருத்துவன்,
முஸ்ஸிலீம்,
ஜாதி,
ஏழை,
பணக்காரன்
என்ற முத்திரை இல்லாத ஆலயம்.

இங்கு உள்ள இரத்தத்திற்க்கு ஒரே நிறம்,
பிரிவினை இல்லை.

அரசியல் இல்லாத இடம்.

ஆறுபேக் ஜிம்      இளைஞனும் தோல்சுருங்கிய முதியவரும் ஒன்றுபொல கருதும் ஆலயம்.

ஒரே இடத்தில் பிறப்பும் இறப்பும் நிகழும் ஆலயம்.

மனிதனை மனிதனாக பார்க்கும் ஆலயம்.

தெய்வத்திற்க்கு அதிக வேலை உள்ளஆலயம் இதுவே.

இந்த ஆலயம் இப்பொமுது காசுக்காக அழிந்து கொண்டிருக்கிறது என்பது உண்மை.

தெய்வமே இதை காப்பாற்ற அனைவருக்கும் அருளை வழங்கு.

ம.கோபி.

அரசு செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் செவிலியர் பற்றாக்குறை, சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தவிப்பு


Sent via WhatsApp by Deepa Srinivasan